User:Karthiksandeepr/sandbox

From Wikipedia, the free encyclopedia


கணக்கன்பட்டி சற்குரு ஸ்ரீ பழனிசுவாமிகள் (மூட்டைசுவாமிகள்)[edit]

மகாஶ்ரீ பழனிசுவாமிகள் ஜீவ சமாதி திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கே சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கணக்கன்பட்டி[1] என்ற கிராமத்தில் உள்ளது. இவர் இருபது மற்றும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்து மறைந்த மிக உயர்ந்த சற்குருவாக கருதப்படுகிறார். 1986 முதல் 2014 வரை பழனி இடும்பன் மலை, பழனி மெயின் ரோட்டில் உள்ள காளி கோவில் மற்றும் கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி என்று பல்வேறு இடங்களில் வாசம் செய்து தம்மைக் காண வந்த லட்சகணக்கான மக்களுக்கு அருள் பாளித்துள்ளார். இவரை ஷிர்டி சாய் பாபா என்றும், ஸ்ரீ போகர்[2] என்றும், பழனி முருகனின் அவதாரம் என்றும் கூட நினைத்து பலரும் வணங்கினார்கள். வந்தவருகெல்லாம் தங்கள் நினைத்த காரியம் நடந்ததாகவும், கொடிய நோய்கள் கூட தீர்ந்தாகவும் கூறப்படுகிறது. இவருடைய பெருமை இன்று இந்தியா மட்டுமில்லாமல் வேறு சில உலக நாடுகளில் பரவியுள்ளது. 1937 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1986 ஆம் ஆண்டு முதல் ஞானியாக கண்டுஅறியப்பட்டு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி ஜீவசமாதி அடைந்தார்.

கணக்கன்பட்டி சற்குரு ஸ்ரீ பழனிசுவாமிகள் (மூட்டைசுவாமிகள்)

வரலாறு[edit]

ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பழனிசுவாமிகள் (மூட்டைசுவாமிகள்) திண்டுக்கல் மாவட்டம் மேற்கில் பழனிக்கு அருகில் உள்ள கணக்கன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவர். இவருடைய பிறந்த வருடம், குறிப்பாக 1937 காலகட்டத்தில், அதே கணக்கன்பட்டி கிராமத்தில், சச்சிதானந்த சற்குரு என்று ஒரு ஞானி வாழுந்ததாக கூறப்படுகிறது கூறப்படுகிறது. இவரது தந்தை திரு திம்மன் என்பவர் ஆவார், தாயார் ரெங்கம்மாள் ஆவார். ஸ்ரீ பழனிசுவாமிகள் சிறுபிள்ளையாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்துவிட்ட காரணத்தால், தந்தை மறுமணம் செய்து கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை தொடரமுடியாமல், 7 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தாக சொல்லப்படுகிறது. இவருடன் பிறந்த ஒரு மூத்த சகோதரி இருக்கிறார். இவருடைய இளயத்தாயார்க்கு பிறந்தவர்கள் திரு சுப்பிரமணியன், திரு குப்புசாமி என்பவர்கள் ஆவார்கள். இன்று மக்களால் மகா ஸ்ரீ பழனிசுவாமிகள் என்று அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் திரு காளிமுத்து என்பதாகும். உடுமலைப்பேட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பெண் பார்த்து அவருக்கு திருமணம் நடந்தது. அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே மரணம் அடைந்துவிட்டார். அதன்பின் தன் குடும்ப தொழிலாக பார்த்து வந்த கால்நடை வளர்ப்பை விட்டுவிட்டு அந்த ஊரில் உள்ள பெரும் விவசாயிகளின் வேலைகளுக்கு ஒத்தாசையாக இருப்பது, வயல் வரப்புகளில் எங்கோ படுத்துறங்குவது என்று காலம் கடத்திய அவர், கடந்த 1986 ஆம் ஆண்டு சிலரால் தாக்கப்பட்டு கொடுமையான காயங்களுடன் பழனி இடும்பன் மலை அடிவாரத்தில் கிடந்த அவரை யாரோ எடுத்து சென்று பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பரிசோதித்த டாக்டர்கள் முதலில் இறந்துபோய்விட்டார் என்று சொல்லி பிரேத கிடங்கிற்கு அனுப்பிவைத்ததாகவும், அங்கே அவருக்கு உயிர் இருப்பது மீண்டும் அறியப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சுவாமிகள் ஏதேதோ தத்துவங்கள் பரிபாஷையில் பேச, மருத்துவர்கள் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் சித்தபிரமை பிடித்துள்ளது என்று மருத்துவம் செய்தார்கள். சுவாமிகள் எந்த மருத்துவமும் வேண்டாம் என்று மருத்துவமனையை விட்டு வெளியேறினார். அதன்பின் பழனி சாலையில் ஏகாந்தமாக நடந்து கொண்டிருந்த அவரை இடும்பன் மலை அருகே இருக்கும் வைத்தியர் திரு நாராயணசாமி என்பவரின் மகள் திருமதி ராஜேஸ்வரி என்பவரால் அடையாளம் காணப்படுகிறது. மெல்ல மெல்ல அவரது அற்புதங்கள் நாடு முழுவதும் பரவ தொடங்கியது.

தன்னை ஒரு அவதாரபுருஷாராக கண்டறியப்பட்ட நாள் முதல் கையில் ஒரு அழுக்கு மூட்டையை தன் தோளில் சுமந்து கொண்டு இருந்து, கடைசிவரை தன் பிரயாணம் செய்த கார்களிலும் கூட நூற்றுக்கணக்கான அழுக்கு மூட்டைகளை ஏற்றி சுமந்ததாக சொல்லப்படுவதால், அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் மூட்டைசுவாமிகள் என்ற பெயர் வந்தது. பின்பு அவரே தனது பெயர் பழனிசுவாமி என்றும், எந்த இடத்தில் பொருள், பெட்ரோல், சாப்பாடு வாங்கினாலும் கணக்கன்பட்டி பழனிசாமி என்று பெயர் போட்டு வாங்க சொல்லுவார் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடைய இளமைக்காலத்தில் ஞான சிரத்தை எதுவும் இல்லாமல் இருந்த இவரின் திடீர் மாற்றத்துக்கு காரணம் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா தாலுகா ஓமலூரில் இருந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்தயோகியே[3] பரகாய ப்ரவேசத்தின்மூலம் இவரது தேகத்தில் வந்துள்ளார் என்றும் பலர் வணங்குகிறார்கள். ஸ்ரீ சிவபிரபாகர சித்தயோகி ஓமலூரில் ஜீவ சமாதி அடைந்தது 1986 ஆம் ஆண்டு பங்குனி மாதம் புரட்டாசி நாள் என்று சொல்லப்படுகிறது. பாம்பாட்டி சித்தரின்[4] சீடனான ஸ்ரீ சிவபிரபாகர சித்தயோகி பதிமூன்றாம் நூற்றாண்டில் பிறந்து பல தேகங்களில் வாழுந்து 15வது தேகமாக ஸ்ரீ சிவபிரபாகர சித்தயோகியாக ஓமலூரில் இருந்தார் என்றும், 16வது தேகமாக கணக்கன்பட்டி பழனிசுவாமிகளாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஞானிகள் வந்த பாதை அறியமுடியாது என்பது போலவே இவரின் வருகையும் இருந்து வருகிறது.

இவர் ஜீவசமாதி அடைவதுற்கு முன்னனதாக வாழுந்து வந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு சிறிதும் ஓய்வில்லாமல் பல மைல்களுக்கு நடந்துகொண்டே இருப்பார் என்றும், அவரை பார்த்த மக்களுக்கெல்லாம் தீராத கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்ததோடு, பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. வாய்பேசாத குழந்தையை பேசவைத்தது முதல், பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்தவரை காப்பாற்றியதும், புற்றுநோயால் இறந்து போவார் என்று சொல்லப்பட்டவர்களை குணப்படுத்தியதும் போன்ற அநேகஅற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தியதால், இரவு பகல் என்று பாராமல் பக்தர்கள் கூட்டம் அவரை பார்க்க வந்தார்கள் என்றும், வந்தவர்கள் அனைவரையும் எதாவது வேலைகள் செய்ய சொல்வார் என்றும், அந்த வேலைகள் செய்பவர்கள் அவைவருக்கும் தங்கள் நினைத்து வந்த காரியங்கள் ஜெயமானது என்றும் கர்மவினைகள் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் பக்தர்களுக்கு நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் என கூறப்படுகிறது. இவர் தனது ஜீவகாலத்தில் கோம்பைப்பட்டியில் உருவாக்கிய கிணற்று நீரை பிரம்ம தீர்த்தம் என்று மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் நோய்நொடிகள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. அவருடன் ஆரம்ப காலத்தில் வாழுந்து வந்த சீடர்கள் பலர் உண்டு என்று சொல்லப்படுகிறது. சுவாமிகள் ஓரிடத்தில் இருப்பது கிடையாது. ஆஷ்ரமம், வீடு, தங்குமிடம், டிரஸ்ட் போன்ற எதுவும் தொடங்க அனுமதித்ததும் கிடையாது.

மகா ஸ்ரீ சற்குரு பகவான் பழநிசுவாமிகள் ஞானசபை, வில்லாபுரம், மதுரை

ஶ்ரீ பழனிசுவாமிகளால் தொடங்கப்பட்ட ஒரே ஒரு அமைப்பு இன்று மதுரை[5] வில்லாபுரத்தில் அமைந்துள்ள மகா ஸ்ரீ சற்குரு பழனிசுவாமிகள் ஞானசபை மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது. இந்த சபை ஆரம்பித்த பின்பு இடும்பன் மலை செல்வதை நிறுத்திக்கொண்டு, அவர் மதுரை சென்று வர ஆரம்பித்தார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அந்த சபையில் சத்சங்கங்கள்[6] மற்றும் பல ஞான காரியங்களும் பகவானின் உயர்ந்த சீடராக கருதப்படும் வக்கீல் சந்திரசேகரன் மற்றும் சில சீடர்களால் நடத்தப்படுத்துவதாக கூறப்படுகிறது. சுவாமியின் சீடர்கள் பலர் அறியப்பட்டாலும், ஒரு சிலர் காலமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சுவாமி தனது கடைசிப்பயணமாக மதுரைக்கு செல்லும் வழியில் தான் ஜீவ ஐக்கியம் ஆனார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஊர்களில் சுவாமியின் பெயரால் கோவில்கள், சபைகள் தோன்றியுள்ளது, குறிப்பாக, நாமக்கல், ராஜபாளையம், சேலம், கரூர், தஞ்சாவூர், மானாமதுரை, திண்டுக்கல் போன்ற இன்னும் சில ஊர்கள் ஆகும். வருடம்தோறும் சுவாமியின் குருபூஜை கணக்கன்பட்டியில் வெகுசிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரையில் அவரது குருபூஜை நடப்பதோடு தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. பழனிக்கு அருகே அமைந்துள்ள பச்சளநாயக்கன்பட்டியில் சுவாமிக்கு பெரிய கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அவரது ஜீவகாலத்தில், ஒரு சில நேரங்களில், கரூர், நாமக்கல்[7], திண்டுக்கல் போன்ற ஊர்களுக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கன்பட்டி ஜீவசமாதியில் தினமும் மூன்று வேலை அன்னதானமும்[8], பௌர்ணமி[9] மற்றும் அம்மாவாசை தினங்களில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. நிர்வாகம், பக்தர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[edit]

  1. ^ "கணக்கன்பட்டி", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2023-06-20, retrieved 2023-10-02
  2. ^ "Bogar", Wikipedia, 2023-12-28, retrieved 2024-01-25
  3. ^ "Siva prabhakara Siddha Yogi". www.sivaprabhakarasiddhayogi.org. Retrieved 2023-10-02.
  4. ^ "பாம்பாட்டி சித்தர்", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2023-09-12, retrieved 2023-10-02
  5. ^ "Madurai", Wikipedia, 2024-01-17, retrieved 2024-01-25
  6. ^ "Satsang", Wikipedia, 2023-11-06, retrieved 2024-01-25
  7. ^ "Namakkal", Wikipedia, 2024-01-25, retrieved 2024-01-25
  8. ^ "அன்னதானம்", தமிழ் விக்கிப்பீடியா (in Tamil), 2022-09-25, retrieved 2024-01-25
  9. ^ "Full moon", Wikipedia, 2023-12-14, retrieved 2024-01-25