User:Valliam/sandbox/ம.நவீன்

From Wikipedia, the free encyclopedia

மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள லூனாஸ் எனும் சிற்றூரில் 31.07.1982ல் பிறந்தார். ஆரம்பப் பள்ளி கெடா மாநிலத்தில் உள்ள வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இடைநிலைப்பள்ளியும் லுனாஸில்தான். அப்பா மனோகரன். அம்மா பேச்சாய்.

16 வயதில் மலேசிய நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான எம்.ஏ.இளஞ்செல்வன் நட்பு கிடைக்க வாசிக்கும் பழக்கம் உருவானது. .எழுத்து, பத்திரிகை ஆசையால் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லாமல் 18 வயதில் கோலாலம்பூருக்கு வந்துவிட்டார். ‘மன்னன்’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.பி.அருண் அவர்களின் நட்பாலும் வழிக்காட்டுதலாலும் இதழியல் துறையில் முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டார். பின்னர் 20 வயதில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்தார்.

எழுத்தாளர் மா.சண்முகசிவாவை சந்தித்தபோது ம.நவீனுக்கு வயது 22 . அவருடனான தொடர் உரையாடல்களால் இலக்கியத்தின் எழுத்தின் மீதான நவீன் பார்வை மாறியது. விளைவு 2005 ல் ‘காதல்’ எனும் நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் இதழை மூத்தப் பத்திரிகையாளர் பெரு.அ.தமிழ்மணி ஆதரவுடன் உருவாக்கினார். பொருளாதாரப் பிரச்சனையால் அது நின்று போக 2007 ல் தன் சொந்த நிறுவனத்தின் கீழ் ‘வல்லினம்’ இதழ் உருவாக்கினார். www.vallinam.com.my எனும் முகவரியில் அகப்பக்கமாக வருகிறது.

பதிப்பகத்துறையில் ம.நவீன் தொடர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். 2014 தொடங்கி 'பறை' என்ற ஆய்விதழ்களைப் பதிப்பித்தார். இவ்வாய்விதழ் ஆறு வெவ்வேறு தலைப்புகளில் காலாண்டிதழாக ஒன்றரை ஆண்டுகள் வெளிவந்தன. மேலும் மாணவர்களுக்காக யாழ் எனும் பதிப்பகத்தை உருவாக்கி தொடர்ந்து பயிற்சி நூல்களையும் கையேடுகளையும் வெளியிட்டு வருகிறார்.

இதுவரை எழுதிய நூல்கள்[edit]

  1. சர்வம் பிரமாஸ்மி – 2007 (கவிதை நூல்)
  2. கடக்க முடியாத காலம் – 2010 (பத்தி தொகுப்பு)
  3. விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு – 2012 (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு)
  4. வெறி நாய்களுடன் விளையாடுதல் – 2013 (கவிதை நூல்)
  5. மண்டை ஓடி – 2015 (சிறுகதை தொகுப்பு)
  6. வகுப்பறையின் கடைசி நாற்காலி – 2015 (கட்டுரைத் தொகுப்பு)
  7. உலகின் நாக்கு (இலக்கியக் கட்டுரைகள்)
  8. போயாக் (சிறுகதை)
  9. மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல்கள்)
  10. நாரின் மணம் (பத்திகள்)

இதுவரை தொகுத்த நூல்கள்[edit]

  1. மலேசிய சிங்கப்பூர் 2010 - 200 பக்கங்கள் (2010இல் மலேசிய சிங்கை நவீன இலக்கிய அறிமுகத்துக்காக உருவாக்கியத் தொகுப்பு)
  2. வல்லினம் 100 - 400 பக்கங்கள் (2017இல் மலேசிய சிங்கை நவீன இலக்கிய அறிமுகத்துக்காக உருவாக்கிய தொகுப்பு)

இதுவரை இயக்கிய ஆளுமைகளின் ஆவணப்படங்கள்[edit]

  • அ.ரெங்கசாமி
  • மா.சண்முகசிவா
  • அரு.சு.ஜீவானந்தன்
  • கோ.புண்ணியவான்
  • சை.பீர்முகம்மது
  • 'இராம.கண்ணபிரான்(சிங்கப்பூர்)
  • மா.இளங்கண்ணன்(சிங்கப்பூர்)
  • 'பி.கிருஷ்ணன்(சிங்கப்பூர்)
  • சீ.முத்துசாமி
  • கோ.முனியாண்டி
  • அக்கினி
  • மா.இராமையா
  • மா.செ.மாயதேவன்

(இவற்றை வல்லினம் முயற்சியில் உருவாக சடக்கு (https://vallinamgallery.com/) அகப்பக்கத்தில் காணலாம். )

ew article name goes here new article content ...

தளங்கள்

பிற இணைப்புகள்[edit]