Jump to content

User:கருப்பு தமிழன்

From Wikipedia, the free encyclopedia
  கீழ்வெண்மணி தீயில் கருகிய                     
    நாம்(நம் தலைவன்)
   அந்த ஆதவன்  ஓளியில்   
       உயிர்ப்போம்

புரட்சியாளர் உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து நட்சத்திர ஒளியில் உயிர்பித்த நாள் அன்று கூட. நம் மக்கள் பார்ப்பன முதலாளித்துவ தீயில் வெந்து கொண்டு தான் இருந்தனர். எறும்பை போன்று சுறுசுறுப்பாக உழைக்கும் மக்கள், அமோகமான விளைச்சல் தரும் விவசாய பூமி, பூமி எங்கும் சூழ்ந்திருக்கும் பச்சை பசேல் போர்த்திய நெற்ச்சேலைகள், சில்லென்று வீசும் காற்று , அந்த மருத நிலத்திற்கே உரிய பண்புகள் கொண்ட கீழ்வெண்மணி. அன்று இது அனைத்தும் இலத்தது. சிறு தீக்குச்சியின் வெப்பத்தை கூட தாங்க முடியாத நாம் குழந்தையின் கரங்கள் நெருப்பு தணல்கள் சுட்டுக்கொண்டு இருந்தன.அந்த குழந்தையின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பல ஆசைகளோடு இருந்த என் தாயின் நெஞ்சை (மார்பகங்கள்) தீ பிளம்புகள் உருக்கிக் கொண்டு இருந்தன. அவர்களுக்கு துணையாக இருந்த என் தந்தையின் கரங்கள். அவர்களுக்காக ஓடி ஓடி உழைத்த கால்கள். அந்த ஓலை குடிசையில் தின்று தீர்த்த தீயில் கரும் கட்டையாய் கருகி கிடந்தனர். இந்தியா உழைப்பாளி வர்க்கம்! உழைத்து கொடுத்து! உழைத்த கொடுத்து, ஓய்ந்து போன ஓய்வில்லாத, நம் சமூக மக்கள்! அன்று முதல் இன்று வரை பார்பனிய சாதி ஆதிக்கத்தாலும் தீயாலும், முதலாளித்துவ வேட்டை நாய்களாலும் பல வரலாற்று ஓலங்களை சந்தித்து இருக்கிறோம் , இருந்தாலும்.

மத யானையின் கோப குணத்தையும், நமக்கே உரிய புறநானூற்று வீர மரபையும் நாம் நினைத்தாலும் நம் மரபு வழி போர் குணம் இன்று வரை அநீதிக்கு எதிராக களத்தில் நிற்க வைத்து கொண்டு வருகிறது. உழைத்தவனுக்கு கூலி,

அரை பிடி நெல் உரிமையை மட்டும் தான் கேட்டோம். அவர்கள் உடைமைகளை இல்லை! நயவஞ்சகம், வன்முறை, தனது இரு கண்களாக கை கொண்ட யூத பயங்கரவாதிகள் அன்று.

இன்று ஆரியர் வழியே அதிக்க தீய சக்திகளும் சுயநல முதலாளிகளும் கை கொண்டு இருக்கின்றனர். நயவஞ்சகத்தில் அரசியலில் வீழ்த்தப்பட்டோம்.வன்முறையில் பரமக்குடியில் சிதறடிக்கப்பட்டோம். பரமக்குடி, முதுக்குளத்தூர் மட்டும் இல்லை கொடியங்குளம், தாமிரபரணி,மாஞ்சோலை, ஊஞ்சனை என எண்ணற்ற எத்தனை எத்தனை போர் களங்கள் நமக்கு .

உரிமை கிடைக்காததால் பல சமூகங்கள் அடிமைத்தனமாகவும், பார்பணியத்துக்கு கூனி குறுகி வாழ்ந்து கொண்டு இருக்கும் இதை மண்ணில் தான் உரிமையாக எண்ணற்ற பல உயிர்களையும் துச்சமாக கொடுத்து வருகிறோம்.

ஆனால் இன்று அதை சிலர் தான் சுயநலத்திற்க்காக அடைகுவைத்து கொண்டு இருக்கின்றன். இந்த கட்டுரை தாழ்வுமனப்பன்மையில் ஏழுதவில்லை நோய் அறிந்தால் தான் மருந்து உண்ண முடியும். நமது வீழ்ச்சியும் அதன் கரணிகளையும் அறிந்தால் தான் நாம் முன்னேற்றத்துக்கான பாதையை அறிய முடியும் . அன்று சட்டம் சமமாக இருந்து இருந்தால் கோபாலகிருஷ்ணனுக்கு தூக்கு தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவனுக்கு கிடைத்தது. பினையில் விடுதலை, சோகுசு வாழ்க்கை, அளவற்ற பாதுகாப்பு. அன்று அவனை தண்டித்தது. நீதிமன்றமே! சட்டமன்றம்மே! இல்லை. மக்கள் மன்றம் தான்!. அதுவும் நம் தோழர்கள் தான். வரலாறு தெரியாத சமூகம் வரலாறு படைக்க முடியாது.

வரலாறு என்பது மீண்டெழும் பாண்டியர் வரலாறு மட்டும் அல்ல முதன் மனிதனின் தோற்றம் முதல் கடைசி மனிதனின்ல (பள்ளரின்)இறப்பு வரை அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அதுவே சரியான வரலாற்று அறி நெறிகளையும் சரியான பண்பாட்டையும் நம்மை பின்பற்ற செய்யும். மருத நில உழவர் குடி கீழ்வெண்மணியில் விளைந்த ஒவ்வொரு நெல் மணிகளும் நம் மக்களின் வியர்வை துளிகள் நிறைந்திருந்தன. அரை பிடி நெல் மணியை பிச்சையாக கேட்கவில்லை. ஊதியமாக அன்றாட உணவிற்காகவும் நம் உரிமைக்காகவும் தான். எப்போது கருத்தியல் போர் ஆயுதப்போர் அது மக்களுக்கு பயனுக்குரியதா? சமூக சீர்திருத்தை உண்டாக்குகிறதா? என்பதை அறிந்து செயல்படுவதே சரியான அரசியல் வேலை. நம் மக்களின் அன்றைய செங்கொடி போர்க்களம் குருதியும் மரண ஓலமுமான களமாக மாறியது. அந்த அறவெளி செங்கொடி போர் நிலக்கொள்ளையர்களின் குரல்வளையை நெறித்து செவுடர்களாக இருந்த செவிகளை கிழித்தன. கொடிய விஷத்தை விட கொடுரமான முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கோபாலக்கிருஷ்ண நாயுடு அவர்களது பண்ணையார் கூட்டமும்.

கரும் மேகங்கள் சூழ்ந்த போதும்,

பூக்களை விட அழகாக பூத்திருந்த நட்சத்திரன்ங்களும்,
அந்த அமைதியான இரவில்,
வெற்றியை நோக்கிய, 

உரிமைக்கான பயணத்தில்.

கோழைத்தனத்தையும் நரித்தனத்தையும் தன் மரபாய் கொண்ட அவர்கள் வெறுப்பு நெருப்பு தணல்களை ஏழை மக்களுக்கு ஆதரவாக இருந்த ஓலை குடிசையின் மேல் எறிந்தனர். துப்பாக்கியால் சுட்டு ஒரு அறைக்குள் அடைத்து புறநானூற்று வீரமரபு கொண்ட நம் மக்களை கோழைத்தனமாக கொன்ற நாள்  டிசம்பர் 25, 1968 ஆம் அண்டு   அரம்ங்கேறியது இந்த கோரச்சம்பவம். 

கருப்பு வெள்ளை காலம் மாறினாலும் நம் மக்களின் வாழ்வியல் மாறவில்லை. மாற்றுவோம் நம் தலைவன் கருத்தியலை இளைய தலைமுறையின் வழியில் .

நடந்ததை விடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம்.
அடுத்து ஒரு கீழ்வெண்மணி தீ அனலையோ,

தாமிரபரணி குருதி வெள்ளத்தை, பரமக்குடி படுக்களத்தையோ, சகோதரர் ராம்குமார். போன்ற நம் சமூகம் நம் தோழர்களின் இழப்புகளை தடுப்போம். அடையாள போராட்டங்களை தவித்து,

சமூக சீர்திருத்தத்திற்கான கருத்தியல் போரை தொடுப்போம். நினைவில் கொள்வோம். 

முதலாளித்துவ விற்குகளை அடுக்கி சாதிய தீயை மூட்டி அந்த தீ தணல்களில் கருகிய 44 தோழர்களின் மரண ஓலத்தை நினைவில் கொள்வோம். நம் தோழர்களின் இறப்பை நம் போரை உயிர்பித்து இருக்க செய்கிறது. மக்களுக்கான மரணம் மகத்தானது. கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!! வீரவணக்கம்!!


                                                       வெ.விக்னேஷ்பாண்டியன்
                                                     உழவர் விடுதலை முன்னானி 
                                      அம்பேத்கர்-இம்மானுவேல் சேகரனார் மாணவர் கழகம்