Jump to content

User:Kanisleen

From Wikipedia, the free encyclopedia

நல்லூர் சென் ஜேம்ஸ் ஆலயம்[edit]

ஆலய உதயம்[edit]

நல்லூர் மிஷனினால் நல்லூரில் கட்டப்பட்ட ஆலயத் திருப்பணிகள் 1828 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தியாகியது.கட்டப்பட்ட ஆலயத்துக்கு பரிசுத்த யாக்கோபு ஆலயம் என்று பெயர் சூட்ட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு பரிசுத்த யாக்கோபின் தினமாகிய ஆடி மதம் 25ம் திகதியன்று புனித ஆலயம் அருட்பணி ஜோசப் நைற் அடிகளாரினால் காலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பரிசுத்த யாக்கோபு ஆலயம் என்று சூட்டப்பட்டது . வழிபாட்டுக்காக அன்றில் பயன்படுத்தப்பட்டது .ஒவ்வொரு ஞாயிறுக் கிழமைகளிலும் , புதன் கிழமைகளிலும் மாலை நேரத்தில் ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்தன.நல்லூர் மிஷனுக்கு 1831.04.01 திகதியன்று உன்னத நாளாக அமைந்தது. அன்று தான் ஆங்கில திருச்சபையின் இலங்கைக்கான ஆயர் அதி.வண.கேபர் ஆண்டகை அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு முதன் முதலாக வருகை தந்த சம்பவமாகும். அந்த வருகையின் போது நல்லூர் மிஷனுக்கும் வருகை தந்து சென் ஜேம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தினர் .அத்துடன் நல்லூர் செமினரியில் கல்வி பயின்ற மாணவர்களையும் சந்தித்து அவர்களின் கல்வி தகைமைகளை பரீட்ச்சித்து பார்த்து அவர்களின் கல்வி தகைமைகளை கண்டு திருப்தி அடைந்தார் .புதிய ஆலயத்தில் நடத்தப்பட்டு வந்த மாலை ஆராதனைகளில் ஏராளமானவர்கள் பங்கு கொண்டனர். புதிதாக கிறிஸ்தவர்களானவர்களும் ,கிறிஸ்தவர்களாக மதம் மாற விரும்பியோரும் ,மாற்று பார்வையாளர்களும் ஏராளமானோர் பங்குபற்றினர் . அத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளின் தொகையும் கூடி கொண்டு சென்றது . 1832ம் ஆண்டில் 68 பெண்பிள்ளைகளும் ,805 ஆண் பிள்ளைகளுமாக அதிகரித்து இருந்தது .


100 ஆவது ஆண்டுப் பார்வையில்[edit]

1928.07.25 ம் திகதியன்று சென் ஜேம்ஸ் ஆலயம் 100 வது ஆண்டு விழாவை அருட்பணி ஐ.எஸ்.இரத்தினாதிக்கம் அடிகளாரும் ,ஜி.ஆர்.கேன்ஸ்மண் அவர்கள் ஆலய நிர்வாக சபை செயலாளராகவும் இருந்து சிறப்பாக கொண்டாடினார்கள் .இந்த ஆண்டு விழா தொடர்பான ஒரு கை நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது .அதில் இந்த 100 ஆவது ஆண்டு காலத்திலே எவ்வளவோ சிறப்பான நிகழ்வுகள் நடந்தேறின.அத்தோடு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடிய நிகழ்வொன்றும் நடந்தேறியது .81 ஆண்டுகள் சிறந்த முறையில் செயற்படுத்தி வந்த பெண்கள் விடுதி பாடசாலை 1923ம் ஆண்டில் இடமாற்ற்றம் செய்து கோப்பாய்க்கு கொண்டு சென்ற சம்பவமே அதுவாகும் . நல்லூர் சென் ஜேம்ஸ் ஆலய வழிபாட்டுக்கு பல விதமான முறையில் அப்பாடசாலை உதவியதோடு சபை பிள்ளைகளுக்கு கல்வி வசதியும் கொடுத்த நிறுவனம், அது இடமாற்றம் பெற்று சென்றதால் ஆலயமும் ஆலய மக்களுமே அதிகம் பதிப்படைந்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.நூறாண்டு விழாவின் பின் தொடர்ந்தும் 1932ம் ஆண்டு வரை அருட்பணி ஐ.எஸ்.இரத்தினாதிக்கம் அடிகளார் ஆன்மீக பணியில் தீவிரமாக உழைத்தார்.அவரே யாழ்ப்பாண சி.எம்.எஸ் மிஷனில் உள்ள பாடசாலைகளில் பொதுமுகாமையாளராக இருந்து பாடசாலை நிர்வாகத்தில் பெரும் பங்காற்றி கல்வி வளர்ச்சியை அதிகரிக்க அரும்பணியாற்றினார் .அவர் சென் ஜேம்ஸ் ஆலயத்தை அண்டிய கல்வி முன்னேற்றம் குறைந்த பொருளாதாரத்தில் பின்னடைவில் இருந்த மக்களுக்கு பெரும் பணியாற்றினார்.அவர்களின் வறுமையை போக்கவும் ,அவர்களின் வறுமையை போக்கவும் அவர்களிடையே காணப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களை கை விட்டு கல்வி அறிவு பெற்று இஜேசுவிடம் அம்மக்களை கொண்டு வர தீவிரமாக செயற்பட்டார் .இதனால் வீடுகள் தோறும் ஜெபக்கூட்டங்களும் ,கிராமங்கள் தோறும் எழுப்புதல் கூட்டங்களும் ,வாராவாரம் நோயாளர்களுக்கு கூட்டங்களும் நடத்தி வந்தார் . இதன் பயனாக சபை மக்கள் ஆவிக்குரிய விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்தார்கள். 1932ம் ஆண்டு நடுப்பகுதியில் அருட்பணி ஐ.எஸ்.இரத்தினாதிக்கம் அடிகளார் இடமாற்றம் பெற்று சென்றபோது அருட்பணி கனன் எஸ்.எஸ்.சோமசுந்தரம் அடிகளார் நல்லூர் சென் ஜேம்ஸ் ஆலயத்தின் குருவாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் .அவர் இச் சபையின் குருவாக 22 வருடங்கள் இருந்து அருட்பணியாற்றினார் .அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும்,குருத்துவ வாழ்க்கை பற்றியும் அறிந்து கொள்வதன் ஊடக வருங்கால சந்ததியினருக்கு பயன் உள்ளதாக இருப்பதோடு ஆலய வளர்ச்சிப் போக்கையும் அறியமுடியும்.