Jump to content

User:RAJALINGAM VSK

From Wikipedia, the free encyclopedia
                                                   தலைப்பு
                                   வீரசிங்கன் குப்பம் ஊராட்சி பற்றிய ஓர் -ஆய்வு






                           முன்னுரை							      	          


                 I   தமிழகத்தில் பஞ்சாயத்து முறை		                       


                 II	பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை 		                


                III    சமுதாய நிலையும் தொழில் முறையும் 	               


                         முடிவுரை		
                         
                         
                         
                         
                         
                         
                      

வீரசிங்கன்குப்பம் ஊராட்சி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3037 ஆகும். இவர்களில் பெண்கள் 1529 பேரும் ஆண்கள் 1508 பேரும் உள்ளனர்.

பெரிய நாயகி அம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், காளியம்மன் கோவில், முனிஸ்வரர் கோவில் முதலிய வழிபாட்டு தலங்கள் இங்கு உள்ளன. முந்திரி பருப்பு மட்டுமே முதன்மையான தொழிலாக கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள எலவத்தடி, நமரியான்குப்பம், புலவன்குப்பம், வீரசிங்கன்குப்பம், வீரசிங்கன்குப்பம் காலனி, அன்னகாரன்குப்பம் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.

இந்த ஊரின் மண்வளம், விவசாயமுறை, சமூகநிலை, மக்களின் தொழில், ஊர் திருவிழாக்கள், பொருளாதார நிலை, ஊராட்சியின் வளர்ச்சி ஆகியவை பற்றி புரிந்துகொள்ளச் செய்யப்பட்ட முயற்சியின் வெளிப்பாடே இவ்வாய்வுக் கட்டுரை ஆகும்.


தமிழகத்தில் பஞ்சாயத்துமுறை:

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து முறையை பொறுத்த வரை விஜயநகரப் பேரரசு சோழர்கள் போன்ற பேரரசுகளின் ஆட்சிக்காலத்தில் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.


விஜயநகரப்ப பேரரசு: பஞ்சாயத்து முறையானது பாளையக்காரர் முறையில் இருந்தது. இம்முறையானது 1529 ஆம் ஆண்டு விசுவநாதரின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது.

பாளையத்தின் பாதுகாப்பு, நிர்வாகம் ,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற பணிகளைப் பாளையக்காரர்கள் செய்தனர்.

மேலும் வரியை மன்னருக்கும், தங்களின் சொந்த செலவுகளுக்கும் ,பாளைய நிர்வாகச் செலவிற்கும்  எடுத்துக் கொண்டனர்.


சோழர்கால பேரரசு:

சோழர் காலத்தில் பஞ்சாயத்து முறையானது குடவோலைமுறையில் மேற்கொள்ளப்பட்டது. குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப் பயன்பட்ட தேர்தல் முறையாகும்.

இம்முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடியில் எழுதுவார்கள். அதை மொத்தமாக கட்டி ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கிபி 9ம் நூற்றாண்டு முதல் கிபி 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறைத் தேர்தல் நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கிபி 907 ஆம் ஆண்டு முதல் 955 வரை ஆண்டு வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகச் சோழன் காலத்திற்குட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

இறுதியாக பானையில் கள்ளம் கபடமறியா குழந்தையை எடுக்கச் சொல்வார்கள். அந்த ஓலையில் யார் பெயர் வருகின்றதோ அவரே வெற்றியாளராக அறிவிப்பார்கள்.இந்தக் குடவோலை முறையில் பூசலின்றி தேர்தல் நடைபெற்றதை நாம் கல்வெட்டுகள் வாயிலாக காணலாம்.

பொது வேலைகள் பல வாரியங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரியத்திற்கும் குடவோலை முறையில் தேர்தல் நடைபெற்றது.


20ம் நூற்றாண்டில் கிராம பஞ்சாயத்து:

20ம் நூற்றாண்டில் பஞ்சாயத்து அமைப்புக்கள் புத்துயிர் பெறக் காரணமாக இருந்தவர் காந்தியடிகள்.  இவரின் கருத்துகளின் படி பஞ்சாயத்து ராஜ்ய நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரமும் அதிகாரமும் வழங்க பலரும் முன் வந்தனர்.

இதன் விளைவாக இந்தியாவில் இந்திய அரசியலமைப்பின் விதி 40ல் மாநில அரசுகள் பஞ்சாயத்துகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டன.


பஞ்சாயத்து செயல்படுகளை ஆராய பல்வந்தராய மேத்தா என்பவரின் தலைமையில் குழு ஒன்று 1957ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை ஏற்படுத்தியது.

1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து சமதிகள், 3. மாவட்ட பரிஷத்துக்கள்.

பின்பு பிரதமர் நேருவின் தூண்டுதலினால் பெரும்பான்மையான மாநிலங்கள் பஞ்சாயத்து ராஜ்ய சட்டங்களை உருவாக்கின.1965 ஆம் ஆண்டு பஞ்சாயத்து அமைப்புகள் சரிவர செயல்படவில்லை.

இதன் விளைவாக அசோக் மேத்தா என்பவரின் தலைமையில் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இக்குழு இரண்டு அடுக்கு பஞ்சாயத்து முறையை அறிமுகப்படுத்தியது. 1. மாவட்ட அளவில் பஞ்சாயத்து அமைப்பு, 2. மண்டல அளவில் அமைப்பு

ஆனால் ,இம்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.
பின்பு 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினரால் ஜி. வி.கே. ராவ் தலைமையில் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழு அப்போது உள்ள கிராமப்புற வளர்ச்சி கண்காணித்தது.

மேலும் 1986 ஆம் ஆண்டு சிங்வி என்பவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சில குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்த வேண்டும் என சிங்கி குழுவானது முன்வைத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசியலமைப்பில் 64வது சட்ட திருத்த மசோதாவினைக் கொண்டு வந்தார். இம் மசோதாவனது 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் படி 20 இலட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் ஒரே விதமான மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை ஏற்படுத்தப்பட்டது.

இச்சட்டம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகளின் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

எல்லாப் பஞ்சாயத்துகளும் ஐந்தாண்டு கால நிர்ணயமும் இடையில் கலைக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் அரசியலமைப்பில் 11-வது அட்டவணை இணைக்கப்பட்டு பஞ்சாயத்து பணிகள் மற்றும் தேர்தல் நடத்தும் முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், இம்மசோதா மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் இம்மசோதா காங்கிரசின் ஆட்சியில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது .பின்பு அரசியலமைப்பு 73-வது திருத்தச் சட்டம் என்ற பெயரில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ல் மக்களவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சட்டம் 17 மாநிலங்களின் பரிசீலமைப்பையும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று 1992 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன் பின்னணியே பின்வரும் காலங்களில் தேர்தல் நடத்தும் முறையையும் , பஞ்சாயத்துகளின் பணிகளையும் சொல்லித் தந்தது எனலாம்.

Reference: பஞ்சாயத்து ராஜ்யம்- ஜே தர்மராஜ்- டென்சி பப்ளிகேஷன்ஸ்.


பஞ்சாயத்து:

பஞ்சாயத்து என்பது பிறமொழிச் சொல்லிலிருந்து வந்த சொல்லாகும் .இதற்கு ஊராட்சி என்பதே தமிழ்ச்சொல்.

மேலும், ஐம்பேராயம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

முன்பு, கிராமங்களில் பஞ்சாயத்து முறையானது எந்த சட்டமும் வகுக்கப்படாமல் “நாட்டாமை” எனும் நீதி காப்பாளனாக இருந்தவரால் பஞ்சாயத்து முறை செயல்பட்டது.

பின்வரும் காலங்களில் தேர்தல் நடத்தியும் சட்டதிட்டம் உருவாக்கப்படும் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னணியாக வீரசிங்கன் குப்பம் ஊராட்சியில் பஞ்சாயத்து முறையானது இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது.

வீரசிங்கன்குப்பம் பஞ்சாயத்தைக் கொண்டுள்ள ஊராட்சிகள்:

  1.எலவத்தடி,
  2.புலவன் குப்பம்,
  3. நமரியன் குப்பம், 
  4.அண்ணங்காரன் குப்பம் 
போன்றவற்றுக்கு பஞ்சாயத்தாயக இன்றளவும் உள்ளது.
வார்டு:
வீரசிங் குப்பத்தில் 5 வார்டுகல் உள்ளன.
1.வடக்கு தெரு-ஆறுமுகம் 
2.நடுத்தெரு-ஜெயக்குமார்
3.ஏஞ்சாமோடு தெரு-இராஜாராமன்
4. தெற்கு தெரு-ஜெயராமன்
5. காலனி தெரு-ரவி
வாக்காளர்களின் பட்டியல்:

ஊராட்சிகள் ஆண்கள் பெண்கள் வீரசிங்கன்கன் குப்பம் 950 750 நமரியங்குப்பம் 602 398 எலவத்தடி 598 323 புலவன்குப்பம் 400 281 அண்ணங்காரன்குப்பம் 59 21 மொத்தம் 2609 1773



தேர்தல் நடத்தப்படும் இடம்: வீரசிங்கன்குப்பம் ஊராட்சியில் தேர்தலானது தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது. தேர்தல் மே மாதத்தில் நடைபெறும்.

ஊராட்சி மன்ற தலைவர்: தற்போது 2012 ஆம் ஆண்டு. நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தேசிங்கு என்பவர் கை உருளைச் சின்னத்தில் நின்று 1100 அதிக வாக்கில் வெற்றி பெற்றார்.

ஊராட்சி மன்ற தலைவரின் பணிகள்:

1. விவசாய மற்றும் விரிவாக்கம், 2. நில ஒருங்கிணைப்பு மற்றும் மண் வளம் காத்தல், 3. சிறுநீர் பாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர் தேக்க வளர்ச்சி, 4. சமூக நல காடுகள் மற்றும் பண்ணை நிலக்காடுகளில் வளர்ப்பும் பராமரிப்பும், 5. குடிதண்ணீர் வசதியினைச் செய்து கொடுத்தல் , 6. சாலைகள், சிறுபாலங்கள், பாலங்கள், நீர்வழிகள் போன்றவற்றை ஏற்படுத்துதல் 7. கிராமப்புற மின்மயமாக்கல் மற்றும் மின்விநியோகம் செய்தல், 8. வறுமை ஒழிப்பு திட்டங்கள், 9. ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பாதுகாத்தல், 10. நூலகங்களை ஏற்படுத்துதல், 11. மருத்துவம், சுகாதாரம் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கலை ஏற்படுத்துதல், 12. நலிவுற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களின் நலன்களைப் பாதுகாத்தல், 13. பொது விநியோகம் முறை,

போன்ற பணிகளை மேற்கொள்கின்றார்.
நேர்காணல்  :

த. தேசிங்கு- ஊராட்சி



                                  அத்தியாயம் ||
                 சமுதாய நிலையும் ,தொழில் முறையும்   

இம்மக்கள் ஆங்கில மொழியையும் தமிழையும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

கிணறு:
வீரசிங்கப்பத்தில் மொத்தம் 10 கிணறுகள் காணப்படுகிறது.

இது 1996 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவரான நடேசன் என்பவரால் கிணறுகள் வெட்டப்பட்டது.

அப்போது பொதுமக்கள் குடிநீராகவும், நீர் பாசனத்திற்காகவும் பயன்படுத்தினர். தற்போது பயன்பாட்டில் 5 கிணறுகள் மட்டுமே பயன்பட்டில் உள்ளது.

கிணறுகளின் நீரை நீர் பாசனத்திற்காகவும், துணி துவைப்பதற்காகவும், குளியலுக்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.மீதமுள்ள ஐந்து கிணறுகள் நீர் வற்றிய கிணறாக பயன்பாட்டில்லாமல்  உள்ளது.


குடிநீர்த் திட்டம் :

குடிநீர் தொட்டிகள் 2010- 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 5ஆக இருந்தது. இத்தொட்டிகள் அப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த குருநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்டது.

அவருடைய ஆட்சிக்காலத்தில் தெருவிற்கு  ஒரு தொட்டிகள் போடப் பட்டன. தற்போது பயன்படும் தொட்டிகள் 4 .

தொட்டிகளின் கொள்ளளவு 50 ஆயிரம் லிட்டர் ஆகும். பின் வந்த அவருடைய ஆட்சியில் ஒரு வீட்டிற்கு ஒரு குழாய் என்ற திட்டத்தின் அடிப்படையில் போடப்பட்டது.


இதன் காரணமாக தண்ணீர் தொட்டியின் பயன்பாடு சிறிது குறைவாகவே காணப்பட்டது.



மக்கள் தொகை விவரப் பட்டியல் :

விவரம் எண்ணிக்கை ஆண்கள் 1759 பெண்கள் 1080 குழந்தைகள் 161 மொத்தம் 2980



ஏரிகள்:


வீரசிங்கஙன்குப்பம் ஊராட்சியில் மொத்தம் 1 ஏரி உள்ளன. அது வேணுகுழி ஏரி என்று அழைக்கப்படுகிறது. அவ்வேரியானது 1996-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் என்பவருடைய ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டவை ஆகும்..

அந்த ஏரியில் சுமார் 50,000 மீட்டர் ஒரு நாளைக்கு நீர்ப்பாசனத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது .

மேலும், அவ்வேரியில் திருவிழாக்கள், சடங்குகள் போன்றவை நிகழும்.

கருமகாரியம், மாசி மாத திதி கொடுத்தல் போன்ற சடங்குகளும், திருமண சடங்குகளும், கோயில் விழாக்களுமான தெப்பம், கன்னி அழைத்தல், இருமுடி கட்டுதல் போன்றவை நடைபெறும்.

தற்போது அவ்வெறியில் 15-வது நிதி குழு மானியம் 2021- 22 ஆம் ஆண்டு தடுப்புச் சூரானது ஊராட்சி மன்ற தலைவரான தேசிங்கு என்பவரினால் கட்டப்பட்டது.
இதனுடைய மதிப்பீடு  3.39 லட்சம் ஆகும்.  ஏரிக்கு நீரானது தினமும் ஒரு லட்சம் லிட்டர் திறந்து விடப்படுகிறது.


நேர்காணல் :

பி மகாலட்சுமி 32 வீட்டுப் பெண்




தாய் திட்டம்:


தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த செல்வி மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் வீரசிங்கன் குப்பத்தில் “தாய் திட்டம்” என்ற அமைப்பானது 2012-13ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.




இதன் படி,


விவரம் எண்ணிக்கை மதிப்பீடு தெருவிளக்குகள் 28 2,66,000 சாலைப்பணிகள் 1 4,30,000 சுடுகாட்டிற்கு தார் சாலை அமைத்தல் 3 12,30,000 சுடுகாடு,இடுகாடுவசதிகள் 4 10,21,500


   போன்றவை  அமைக்கப்பட்டன.



நியாய விலை கடை

நியாய விலை கடையானது 1996 ஆம் ஆண்டில் வீரசிங்கன் குப்பம் ஊராட்சியில்  கொண்டுவரப்பட்டது.  தற்போது 2018 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
ஊராட்சியில்  மொத்தம் 595 ரேஷன் அட்டைகள் உள்ளன. இதற்கு விடுமுறை நாட்கள் இல்லை. மாதம் முதல் வாரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
தினம் ஒரு நாளைக்கு 100 அட்டைகள் பதியப்படும்.
அத்தியாவசிய பொருட்களின் அளவு அட்டை கேட்டாற் போல் வழங்கப்படும்.
நேர்காணல்:
மா. காசிலிங்கம்   56    நியாய விலைக்  கடை எடை அளவிட்டாளர்.





வடிகால் வாய்க்கால் அமைத்தல்:

15 வது நிதி குழு மானியமாக 2020 - 21 ஆம் ஆண்டில் வீரசிங்கன் குப்பம் ஊராட்சியில் வடக்குத் தெருவில்  வடிகால் வாய்க்காலானது  ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தேசிங்கு என்றால் ஏற்படுத்தப்பட்டது.
இதனுடைய மதிப்பீடு 3 லட்சம்.
இதன் விளைவாக கொசு உற்பத்தியானது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் சாலைகளில் நீர் தேங்காாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டது.


ஊராட்சி சேவை மையம்:

ஊராட்சி சேவை மையமானது 2015 - 16ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் ஆட்சிக்காலத்தில்   கட்டப்பட்டது.
இதனுடைய மதிப்பீடு 17 லட்சம் ஆகும்.



பாரத பிரதமர் சாலைகள் திட்டம்:

இத்திட்டமானது காட்டுக்கூடலூர் முதல் வீரசிங்கன்குப்பம் வரை மேம்பாடு செய்யப்பட்டது.


மொத்த நீளம் :1,040 கிலோ மீட்டர்
ஆரம்பித்த நாள் 06/02/2019
முடிவற்ற நாள் 21 /03/2020
ஒப்பந்ததாரரின் பெயர்: ராமதாஸ்
மதிப்பீடு: 34.11 லட்சம்
வீரசிங்கங்குப்பம் ஊராட்சியானது 2 கிலோ மீட்டர் தார்சாலையும் ஒரு கிலோ மீட்டர் சிமெண்ட் சாலையும் கொண்டுள்ளது.
நேர்காணல் :   த.தங்கமணி    38    முந்திரி முகவர்


                            தொழில்முறை 


வீரசிங்கங்குப்பம் ஊராட்சியின் தொழில்முறையில் காணப்படுவது “முந்திரி, மாங்காய்,பலா போன்றவை ஆகும். அதில், மிக முக்கியமானதாக கருதப்படுது முந்திரித் தொழிலாகும்.

தொழில் முறை 2 ஆக காணப்படுகிறது.

1. வேளாண்மை, 2. முந்திரி தொழில்


|. வேளாண்மை:

“ஆடி பட்டம் தேடி விதை” என்ற முன்னோர்களின் பழமொழிக்கு இணங்க ஆடியில் பயிர்கள் விதைக்கப்பட்டு, தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.

அறுவடை செய்யும் பயிர்கள்:
1.உளுந்து,
2.துவரம் பருப்பு,
3.கம்பு,

4. சோளம்,
5. கொள்ளு,

6. பெரும்பயிறு
போன்ற பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது.
தம்முடைய உபயோகதிற்கு பின் எஞ்சிய பயிர்களை  விற்கின்றனர்.
மேலும் திருவிழாக்களில் தெய்வத்தின் ஊர்வலத்தின் போது தெய்வத்திற்கு படையிடுவார்கள்



||.முந்திரி தொழில்:


இக் கிராம மக்கள் முந்திரி தொழிலை முக்கிய தொழிலாக கருதுகின்றனர் .ஏனென்றால் வீரசிங்குப்ப ஊராட்சியின் எல்லையின் மொத்த பரப்பளவில் 3/4 வீதம் முந்திரிக்காடுகளாக உள்ளது. மீதம் உள்ள 1/4 வீதத்தில் மேற்குறிப்பிட்ட பயிர்களான உளுந்து, கம்பு, துவரம் பருப்பு, கொள்ளு, பைத்தம் பயிர் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றது.

முந்திரிகளைத் தரம் பிரித்தல், முந்திரித்  தோலினை நீக்குதல், முந்திரிக்கொட்டையில் இருந்து முந்திரியை   எடுத்தல் போன்ற பணியினைச் செய்கின்றனர். மேலும் முந்திரி ஆனது தமக்கு தேவைக்காக மட்டுமல்லாமல் வெலி ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இதரத் தொழில்:

சிலர் இவ்விரண்டு தொழிலையும் செய்யாமல் பள்ளிகளிலும்,
அரசு அலுவலகங்களிலும் பணிபுரிகின்றனர் .

மேலும் அருகில் உள்ள ஊர்களுக்கு கூலித் தொழிலாளியாகச் சென்று கூலித் தொழிலைச் செய்கின்றனர். வெளிநாட்டுக்கு சென்று பணிபுரிபவர்களும் இங்கு உண்டு.

நேர்காணல்:   ர. பாலகிருஷ்ணன்   56    விவசாயி






                                 அத்தியாயம் |||


பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை

பொருளாதாரம் :


வீரசிங்கன்குப்பம் ஊராட்சியின் முதுகெலுங்கமாக இருப்பது முந்திரி தொழிலாகும். இவ்வூரின் பொருளாதாரமானது முந்திரியின் வருவாயினைக் கொண்டுள்ளது.
முந்திரியின் இறக்குமதி ஏற்றுமதி:
ஏற்றுமதி:
முந்திரியை பல மாவட்டங்களுக்கும், பல நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1.கானா, 2.வெனிஸ், 3.கிருஷ்ணகிரி, 4.கடலூர், 5.பண்ருட்டி, 6.நெய்வேலி , 7.பொன்னேரி, 8.புவனகிரி, 9.சிதம்பரம்.

என தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விலையானது இங்கிருந்து 1 கிலோ 600 ரூபாய் என்று அனுப்பப்பட்டு வெளியிடங்கலுக்கு  700 ரூபாய் அல்லது அதற்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு 10,000 கிலோ முந்திரி பயிரானது ஒரு கடைக்கு வீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  உலக அளவில் முந்திரியின் பயன்பாடு அதிகமாகவே  உள்ளது. மேலும், பேக்கரிகலில் ஒரு நாளைக்கு 1000 கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இறக்குமதி:

வெளிநாட்டில் உள்ள முந்திரி கொட்டைகள் கிராமத்திற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதுவும் குறிப்பாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அக்கொட்டை மூட்டைகள் ரூபாய் 10,000க்கு 1 மூட்டை  இறக்குமதி செய்யப்படுகின்றன.  மேலும் கொட்டைகள் உடைத்து முந்திரியாக  ஏற்றுமதி செய்யப்படுகின்றனது.
அப்பயிரின் விலை அதிகளவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நேர்காணல்:

ச.சரத்குமார்  25 பயிர் வியாபாரி




வேளாண்மை:

வேளாண்மையில் மா,பாலா போன்ற கனிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மாங்கனியை அறுத்து அவற்றைப் பழுக்க வைத்து வெளிநகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றனர். மேலும், ஏற்றுமதியும் செய்கின்றனர்.

நெய்வேலி ,விருத்தாச்சலம் போன்ற நகரங்களில் விற்பனை செய்கின்றனர். பலாக்கனியை காயாக இருக்கும் பொழுதே அக்கனிகளை விற்று விடுகின்றனர்.

சிலர் கனிகளை காய் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு விற்கின்றனர். மேலும், சிலர் அக்கனிகளை பழுக்க வைத்து பலாப்பழமாகவும் விற்கின்றனர். இதனுடைய வருவாயானது மிக குறைவாக உள்ளது எனலாம்.


குத்தகை விடுதல்:

சிலர் தங்களின் நிலங்களை  நிலமில்லாதவர்களுக்கு குத்தகைக்கு விடுகின்றனர். 1 வருடம் 2 வருடம் காலத்திற்கு குத்தகைக்கு விடுகின்றனர் .சராசரியாக நிலமானது ரூபாய் 10,000 க்கு குத்தகை விடப்படுகிறது .

இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியானது சற்று உயரப்படுகிறது .கால்நடைகளை வளர்த்து விற்பதன் மூலமாக வருவாயானது கிடைக்கின்றது.

1 ஆடு ரூபாய் 5 ஆயிரத்திற்கும் அதற்கு மேலும் விற்கப்படுகிறது.

1 மாடு ரூபாய் 8000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களின் துணை வருவாயாக கிடைக்கிறது.


                                   கல்வி முறை

வீரசிங்கன் குப்பம் ஊரட்சியில் முனபளவு இருந்ததை விட இன்று வளர்ச்சியுற்றுக் காணப்படுகிறது. இக் கிராமமானது பள்ளிகளையும் ,நூலகங்களையும், அங்கன்வாடி கட்டிடப் பள்ளிகளையும் கொண்டுள்ளது.


நூலகம்:

“வீட்டிற்கு ஒரு நூலகம்” என்று அண்ணாவின் கருத்திற்கிணங்க நூலகமனது 2008 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த குருநாதரின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

நூலகம் பல அறிய புத்தகங்கலையும், குழந்தைகலுக்காண நீதி கதை புத்தகம் கொண்டுள்ளது. தற்போது புத்தகங்களை மாணவ மாணவியர்களுக்கும் பெரியோர்களுக்கும் சென்று படிக்கின்றனர்.
இதனால் இவ்வூரின் கல்வியறிவானது  தற்போது  73%ஆக உயர்ந்துல்லது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021 - 2022 ஆம் ஆண்டின் படி பழுதி நீக்கம் செய்யப்பட்டது. 

மதிப்பீடு 1, 58,000 ஆகும். நூலகமானது இத்திட்டத்தின் பின்பு பல புத்தகங்களையும் ,நவீன வசதிகளையும் கொண்டுள்ளது .


பள்ளிகள்:

வீரசிங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பல்ளியானது 1990 ஆம் ஆண்டு அப்போதிருந்த ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் என்பவரினால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 600 மாணவ மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ல மு க ஸ்டாலின் கொண்டு வந்த காலை சத்துணவு திட்டத்தினால் மாணவர்கலின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. மேலும் கல்வியை உயர்த்த வேண்டும் என்பதற்காக 2000-ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியானது கொண்டுவரப்பட்டது .

50 மாணவர்கள் படித்து நிலையில் தற்போது 100 மாணவர்கள் நடுநிலைப் பள்ளியில் கல்வி கற்கின்றனர். வீரசிங்கன் குப்ப கிராம ஊராட்சியில் 2023 ஆம் கல்வி ஆண்டு கணக்கின்படி மொத்தம் 300 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆண்கள் 179 மாணவர்கள், பெண்கள் 121 மாணவியர்கள் மொத்தம் 300 பேர். மீதமுள்ள மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர்.


தனியார் பள்ளிகள்: 1. தூ.கலியபெருமாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி [பேர் பெரியான்குப்பம்] 2. ராஜராஜன் மேல்நிலைப் பள்ளி[முத்தாண்டிகுப்பம்] 3. வள்ளலார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி [கொள்ளுக்காரன்குட்டை] 4. ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி[ நெய்வேலி] 5. என் எம் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி [நெய்வேலி] 6. மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி [நெய்வேலி] 7. அரவிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி [நெய்வேலி]

 என தனியார் பள்ளியில் பல உள்ளன.
நேர்காணல்: எஸ் கிருஷ்ணராஜ் – 37- தலைமை ஆசிரியர் வீரசிங்கங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.


அங்கன்வாடிக் கட்டிடம்:

அங்கன்வாடி கட்டிடப் பள்ளியானது 1 முதல் 5 வயது குழந்தைக்கு கல்வி கற்கப்படும் பள்ளியாக உள்ளது. இது நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு எம் பி சி சுப்ரமணியன் பி எஸ் சி, எம் ஏ என்பவரினால் 2013 -14 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
தற்போது அதில் 50 குழந்தைகள் கல்வி கற்கின்றனர். குழந்தைகளுக்கு அபாகஸ் என்ற கல்விமுறையானது கற்பிக்கப்படுகிறது. மேலும் அக் குழந்தைகளின் இடைவெளி உணவாக சத்துணவு இணைவானது வழங்கப்படுகிறது.
இணைவுணவானது கோதுமை போன்ற ஊட்டச்சத்து மிகுந்த பயிர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
இன்று இதற்கென தனியார் பள்ளிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அழிந்து வரும் நிலையில் உள்ளது.
நேர்காணல்: என் சாதரதாம்பாள் 68 அங்கன்வாடி கட்டிடக் காப்பாளர்


முடிவுரை:

நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கும் கிராம பஞ்சாயத்து ஆட்சி முறை மற்றும் தல ஆட்சி நிர்வாகத்தில் செயல்பாடு ஒன்றை ஆய்வு செய்ய வீரசிங்கன் குப்பம் ஊராட்சி அமைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் இந்ததல நிர்வாகங்களினால் ஏற்படும் நன்மைகள், பிற குறைபாடுகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன. இவற்றை இன்னும் மேம்பாடு அடையச் செய்து ஒரு உண்மையான மக்களை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன.

வீரசிங்கன் குப்பம் கிராமமானது ஓரளவே கல்வி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. மேல்நிலைக் கல்வி பெற உயர்வு நிலை படிப்பு முடித்த மாணவர்கள் அங்கிருந்து அருகிலுள்ள பேர்பெரியான்குப்பத்திற்கும், பண்ருட்டிற்கும் செல்ல வேண்டி உள்ளது

இந்நிலை மாற தமிழக அரசானது கிராமப்புற கல்வி மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு கிராம ஊராட்சி மக்கள் நலனை மேம்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்தின் சுகாதார நிலையம் அதனை நிர்வகிக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு உட்பட்டது.
மக்களின் நலன் குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நளினின் பொருட்டு அரசினால் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கிராமசபை மற்றும் இதர முக்கிய திட்டங்களின் மூலமாக வீரசிங்கன் குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கொண்டுவர முயற்சிகள் செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி, கல்லூரி படிப்பதற்கான செல்பவர்களின் நலனின் பொருட்டு வீரசிங்கன் குப்பம் கிராமவாசிகள் நலனிற்காகவும், பேருந்து வசதியினை மேம்படுத்தியும், பேருந்து எண்ணிக்கை அதிகப்படுத்தவும் வேண்டும் .

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள வீரசிங்கன்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் முந்திரி விவசாயத்தைச் சார்ந்தவை. முந்திரிக்கான விற்பனையில் நிலையான விலை நிர்ணயிப்பும் இப்பகுதி முந்திரி பயிரிடுவோரின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பாக உள்ளது .


“கிராமங்களில் உள்ளவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான்

நகரங்களில் உள்ளவர்கள் கை வைக்க முடியும்”
என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் கிராமங்களில் வீரசிங்கன் குப்ப ஊராட்சியும் ஒன்ராகும்.

பசுமையான மரங்கள், புல்வெளிகள், சூழ்நிலைகள் எங்கு நோக்கிலும் காணப்படும் முந்திரி தோப்புகள் ,வயல்கள்,கோயில்கள், கிராமத்தின் இயற்கை வளத்தை பெருக்கும் ஓடைகள், குளங்கள் என இக் கிராமம் மனதை கவரும் இயற்கை சூழ்நிலை கொண்டுள்ளது.

இந்தியாவை நகரமயமாக்குவதா அல்லது கிராமமயமாக்குவதா கிராமமயமாக்குதல் வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்த மகாத்மா காந்தி அவர்கள் கிராம வாழ்க்கையின் கலை அழகை கற்பிக்கும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
உலகலாவிய மக்களாட்சி கோட்பாட்டின் பிரதிபலிப்பாக விளங்குவது இந்திய ஜனநாயக   அமைப்பாகும். இந்தியாவில் உல்ல  கிராமங்கலே  மக்களின் பொருளாதார கலாச்சார வாழ்வின் மையமாக விளங்குகின்றன.