Jump to content

User:Yaazh689

From Wikipedia, the free encyclopedia

செந்தில்பாலா(கவிஞர்-ஓவியர்)

செந்தில்பாலா என்ற பெயரில் படைப்பு தளங்களில் வெளிப்படும் தே.பாலமுருகன் (09-06-1981) ஆகிய இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகணூர்-புதூர் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். அரசு மேல்நிலைப்பள்ளியொன்றில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார். கவிதை, கதை, ஓவியம், குறும்படம், நாடகம் என பலதளங்களில் வெளிப்பட துடிக்கும் ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்.

”மோழி” என்ற இவர் வரைந்த நவீன கோட்டோவியத் தொகுப்பும், ”கண்டன் கார்கோடகன்” என்ற தெருகூத்து ஆவணப்படமும், “இலைகளற்ற மரத்தின் நிஜ உருவம்” என்ற கவிதைகள் குறித்தான கட்டுரை தொகுப்பும் விரைவில் வெளியிட இருக்கிறார்.

பல்வேறு சிற்றிதழ்களில் எழுதிவரும் இவர் செஞ்சி நறுமுகை, குறிஞ்சிவட்ட குழுவினருடன் சேர்ந்து இயங்கி வருகிறார். செஞ்சிப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி-29 அதாவது தை-1 இன் முன் இரவு நடைபெறும் குறுஞ்சி விழா ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். குறிஞ்சி மலர்-1 & 2 யை நறுமுகைஜெ.இராதாகிருஷ்ணன், இரா.இராகுலனுடன் இணைந்து தொகுத்திருக்கிறார்.

இவரது அம்மாவும் மனைவியும் (சாந்தா - ஆதிலட்சுமி:மாமியார் - மருமகள்) எழுதிய கவிதைகள் “கொக்கான் பயிர்” என்ற தொகுப்பாக வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஒரு மகள் - கவியாழினி (06-08-2009) ஒரு மகன் - இளமாறன் (09-02-2014) இருக்கிறார்கள்.

படைப்பு வகை பெயர் ஆண்டு
கவிதைத் தொகுப்பு கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள் 2007
கவிதைத் தொகுப்பு மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் 2013
சிறார்பாடல் தொகுப்பு இங்கா 2016
குறும்படம் ஆயிடுச்சி 2012